‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

By Swetha on ஆனி 23, 2026

Spread the love

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த அறிவிப்பின்படி, ஊழியர்களுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே மதிய உணவு இடைவேளை அனுமதிக்கப்படும் என்றும், அதில் ஒரு நிமிடம் தாமதமானால் கூட, அதற்குத் தண்டனையாக ஒரு மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாலை 6 மணிக்கு அலுவலக நேரம் முடிந்த பிறகு, இந்த ஒரு மணி நேரக் கூடுதல் பணியை ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு எவ்வித கூடுதல் ஊதியமும் வழங்கப்படாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் இறுதியில் பெரிய எழுத்துக்களில் “வேகமாகச் சாப்பிடுங்கள்” என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த கடுமையான விதியை நெட்டிசன்கள் ‘மைக்ரோமேனேஜ்மென்ட்’ என்றழைக்கப்படும் ஊழியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்காணிக்கும் மோசமான முறை என விமர்சித்து வருகின்றனர்.

   

இந்த விசித்திரமான விதி சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு தரப்பினர், ஒரு நிமிடத் தாமதத்திற்கு ஒரு மணி நேரம் இலவசமாக வேலை வாங்குவது சட்டவிரோதமானது என்றும், இத்தகைய நிறுவனங்களில் நல்ல ஊழியர்கள் யாரும் நீடிக்க மாட்டார்கள் என்றும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில், மற்றொரு தரப்பினரோ ஊழியர்கள் மதிய உணவு என்ற பெயரில் நேரத்தை வீணடிப்பதைக் கட்டுப்படுத்த இது போன்ற விதிகள் சில நேரங்களில் தேவைதான் என்று நிறுவனத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.