சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமின்றி, விலங்கினங்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பரபரப்பான சாலையைக் கடக்க முயன்ற நாகப்பாம்பு ஒன்று, கடுமையான வெயிலின் காரணமாகச் சாலை சூடாகிவிட்டதால், மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்தக் காட்சி பலரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
அந்தக் காணொளியில், நாகப்பாம்பு ஒன்று தன் வாயில் ஒரு எலியைப் பிடித்துக்கொண்டு சாலையைக் கடக்க முற்படுகிறது. ஆனால், கத்தரி வெயிலால் தார்ச்சாலை தணலாகக் கொதித்துக் கொண்டிருந்ததால், பாம்பினால் அதன் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சூடு தாங்காமல் தவித்த அந்தப் பாம்பு, சாலையின் மறுபக்கத்திற்குச் செல்ல முடியாமல் பாதியிலேயே திணறி, இறுதியில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மரத்தின் நிழலை நோக்கி வேகமாக ஓடிச் சென்று தஞ்சமடைகிறது. இந்தத் தவிப்பானக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகின்றது.
https://www.instagram.com/reel/DY6HmzmJHRL/?utm_source=ig_web_copy_link
சமீபகாலமாக அதிகரித்து வரும் காடழிப்பு மற்றும் கடுமையான காலநிலை மாற்றம் காரணமாக, பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தங்களின் வாழ்விடங்களை இழந்து மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி வேகமாக வரத் தொடங்கியுள்ளன என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. வாயில் இரை இருந்தும், இயற்கையின் சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு முன்னால் ஒரு விஷப்பாம்புகூட திகைத்து நிற்கும் இந்தக் காணொளி, தற்போதைய புவி வெப்பமயமாதலின் தீவிரத்தை மக்களுக்குப் புரிய வைக்கும் ஒரு விழிப்புணர்வுப் பதிவாகவும் மாறியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…