“ஆட்டம் இனிதான் ஆரம்பம்!”.. பட்ஜெட்டில் காத்திருக்கும் ‘மெகா சர்ப்ரைஸ்’.. சட்டசபையில் விஜய் காட்டப்போகும் விஸ்வரூபம்.. எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் பெரிய ஸ்கெட்ச்..!!

Spread the love

சட்டமன்றத் தேர்தல் முடிவில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பணியிடமாற்ற நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தவெக அரசின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்கான முதல் முயற்சியாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு முன்பாகவே, தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை எப்படி உள்ளது என்பதைப் பொதுமக்கள் வெளிப்படையாக அறியும் வகையில் ‘வெள்ளை அறிக்கை’ தயாரிக்கும் பணிகளும் முழு வேகத்தில் நடந்து வருகின்றன.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாளன்றே, முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற கடன் சுமை மற்றும் செலவினங்களின் விவரங்களை மக்கள் அறியும் பொருட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என விஜய் அறிவித்திருந்தார். இதுகுறித்து நேற்று சென்னையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், அடுத்த இரண்டு வாரங்களில் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இது வெளியாவது உறுதி என்றும் தெரிவித்தார். இந்த வெள்ளை அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இதில் ஆளுநர் முதலில் உரை நிகழ்த்த உள்ளார்; அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மூன்று நாட்கள் விவாதங்கள் நடைபெற உள்ளன. இந்த ஆளுநர் உரையில் புதிய அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் அதிரடி அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆளுநர் உரைக்கு அடுத்தபடியாக, நடப்பு நிதியாண்டிற்கான தவெக அரசின் முழுமையான முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தலின் போது தவெக அறிவித்த மகளிருக்கான ரூ.2,500 உரிமைத்தொகை, தாய்மாமன் சீர், தாலிக்கு தங்கம் மற்றும் ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் போன்ற முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்று ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து அதன் மீதான விவாதங்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இறுதி பதில் உரை வழங்குவார். அதன் பின்னர், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கப்பட்டு, நாளொன்றுக்குக் குறைந்தது 4 துறைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த விவாதங்களின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்தத் துறை அமைச்சர்கள் விளக்கமான பதில்களை அளிப்பதோடு, தங்களது துறைகள் சார்ந்த புதிய மக்கள் நலத் திட்டங்களையும், முக்கிய அறிவிப்புகளையும் முறைப்படி வெளியிடுவார்கள்.

Muthu Mani

Recent Posts

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

9 minutes ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

15 minutes ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

24 minutes ago

“அடி மாட்டு ரேட்டுக்கு பேரம்..?!” – வைகோ பேட்டியால் ஆடித்தீர்ந்த தமிழக அரசியல்… விஜய்யை வாரிச்சுருட்டிய திமுக எம்.பி…!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

26 minutes ago

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

35 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

37 minutes ago