அய்யய்யோ… சைக்கிள் கேப்ல பாம்பா?… சக்கரத்தில் சுற்றிய நல்ல பாம்பு… அலறி அடித்து ஓடிய மாணவன்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் வழக்கம் போல் தனது மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக அவனது மிதிவண்டிச் சக்கரத்தில் விஷமிக்க நல்ல பாம்பு ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.

சக்கரத்தில் பாம்பு சுற்றியிருப்பதை மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே கவனித்த அந்த மாணவன், கணமும் தாமதிக்காமல் பயத்தில் கத்தியபடி மிதிவண்டியை அப்படியே நடுவழியில் போட்டுவிட்டுத் தப்பியோடினான்.

   

https://twitter.com/VivekshuklaLive/status/2098692801752117297/video/1

   

இச்சம்பவத்தைக் கண்டு அஞ்சிய அப்பகுதி கிராம மக்கள், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகே மிதிவண்டிச் சக்கரத்திற்குள் சிக்கியிருந்த அந்த விஷப் பாம்பை பத்திரமாக வெளியே எடுத்தனர்.