முட்டையின் மஞ்சள் கரு இதயத்திற்கு ஆபத்தா…? ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்…? எய்ம்ஸ் இரைப்பை குடல் நிபுணர் அளிக்கும் தெளிவான விளக்கம்…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

தினசரி உணவில் முட்டை சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதிலுள்ள மஞ்சள் கரு கொலஸ்ட்ராலை அதிகரித்து இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற பரவலான பயம் மக்களிடையே உள்ளது.

இது குறித்துப் பிரபல எய்ம்ஸ் இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி அளித்துள்ள விளக்கத்தில், ஆரோக்கியமான ஒரு நபர் தினமும் ஒரு முழு முட்டையைத் தாராளமாகச் சாப்பிடலாம் என்றும், உணவில் உள்ள கொலஸ்ட்ரால் நேரடியாக இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலாக மாறுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

   

இருப்பினும், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வாரத்திற்கு 3 முதல் 4 முட்டைகள் வரை மட்டுமே உட்கொள்ள வேண்டும் அல்லது மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முட்டையை எண்ணெயில் பொரித்து உண்பதைத் தவிர்த்து வேகவைத்து உண்பதே இதயத்திற்குப் பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.