Categories: சினிமா

தம்பி 5 வருஷமா கதறிட்டு இருக்கீங்க… அவர் பெயரை கெடுக்காதீங்க… விஜய் ரசிகர்களை சீண்டிய கார்த்தி பட தயாரிப்பாளர் ..!

Spread the love

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் உடைய சினிமா வாழ்க்கையில் அதிகமான பட்ஜெட்டில் வெளியான திரைப்படம் கங்குவா. இந்த படம் அதிகமான  எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் இரைச்சல் அதிகமாக இருந்தது கதை சரியில்லை என பல குறைகள் இருந்ததாக விமர்சனம் வந்தது.

மேலும் சினிமா விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை விமர்சித்து இருந்தார்கள். இதனை அடுத்து படத்தில் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தததையடுத்து ஞானவேல் ராஜா மனைவி நேகா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு இருந்தனர். அது மட்டும் இன்றி சமீப காலங்களில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் கடுமையான விமர்சனத்தால் வசூல் பாதிக்கப்படுவதாகவும் விமர்சகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் திரையரங்க உரிமை சங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

முன்பு பிகில் படத்தோடு தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் கைதி திரைப்படம் கடந்த 2019 ஆம் வருடம் வெளியான போது கைதி திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. அப்போது ரசிகர் ஒருவர் ஆன்லைனில் பிகில் டிக்கெட் வாங்குவதற்கு பதிலாக கைதி டிக்கெட்டை வாங்கியதால் வருத்தப்படுவதாக கூறியுள்ளார். அதற்கு எஸ்.ஆர் பிரபு, “தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு அறிவு இல்லை போ” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவை கங்குவா திரைப்படம் குறித்து எஸ்.ஆர் பிரபு கூறியதையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை வம்புக்கு இழுத்துள்ளார்கள்? ஜப்பான் NGK  தயாரித்தபோது அறிவு எங்கே போனது? என்று கேட்டுள்ளனர் இதற்கு எஸ்.ஆர் பிரபு “என்னடா தம்பி ஒரு அடி திருப்பி அடிச்சதுக்கு அஞ்சு வருஷமா கதறிட்டு இருக்கீங்க. மக்கள் பணி நிறைய இருக்கு. போய் அண்ணனுக்கு துணையா அடுத்த வேலை பாருங்கடா. நல்ல மனுஷன் அவரோட பெயரை கெடுத்துட்டு திரியாதிங்கன்னு பதில் கொடுத்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் எஸ்.ஆர் பிரபுவுக்கு எக்ஸ் பக்கத்தில், சினிமா பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் சமூக வலைதளத்தில் வார்த்தை போர் ஏற்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago