சென்னை மக்களுக்கான Super Spot… வரவிருக்கிறது மிதக்கும் உணவகம்…

Spread the love

சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றது. சென்னைக்கு அருகிலேயே மகாபலிபுரம் இருக்கிறது. இது பிரபலமான சுற்றுலா தளமாகும். அதுபோலவே சென்னைக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக சென்னை மக்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய ஒரு புதுமையான ஒரு ஸ்பாட் உருவாக இருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.

சென்னை அருகே இருக்கும் முட்டுக்காட்டில் ஏரியின் அழகை ரசித்தபடியே உணவருந்தும் வகையில் மிதவை உணவகம் மக்கள் பயன்பாட்டிற்காக தயாராகி வருகிறது, சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது முட்டுக்காடு படகு துறை.

இந்த முட்டுக்காடு படகுத்துறையில் 100 பேர் அமர்ந்து ஏரியின் அழகை ரசித்தவாறு உணவருந்த கூடிய மிதக்கும் உணவகம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதுதான் தமிழகத்தின் முதல் மிதக்கும் உணவகம் ஆகும். இந்த மிதக்கும் உணவகத்தில் இரண்டு அடுக்கு இருக்கிறது. கீழ் அடுக்கில் அமர்ந்து உணவருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அதற்கு மேல் அடுக்கில் இயற்கையை ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மிதக்கும் உணவகம் 125 அடி நீளமும் 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பாக தயாராகி வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கொச்சியை சேர்ந்த க்ராண்டியூர் மறைன் இன்டர்நேஷனல் மூலமாக இந்த மிதவை உணவகம் செயல்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ரூ 5 கோடி மதிப்பீட்டில் இந்த மிதவை உணவகம் தயாராக இருக்கிறது. தற்போது திறப்பு விழாவுக்கு இந்த மிதவை உணவகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் இது திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

admin

Recent Posts

அடபாவேமே..! என்ன நடக்கிறது?… பட்டப்பகலில் சாலையில் சுருண்டு விழுந்த வாலிபர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்… அதிர்ச்சிப் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…

23 minutes ago

ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…

29 minutes ago

“போஸ்ட் மார்ட்டம் செய்தால் தீக்குளிப்பேன்…”ஆபாச வீடியோ காட்டி சித்ரவதை… 14 வயது மகனுடன் சேர்த்து நாடகமாடிய தவெக பெண் நிர்வாகி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில்…

30 minutes ago

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது…? ரூ.100 கோடி லஞ்சப் புகார் விவகாரம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்கில், முன்னாள்…

36 minutes ago

மூத்த தலைவர்களுடன் அதிகரித்த இடைவெளி…! உதயநிதியின் ‘அறிக்கை அரசியல்’ உத்தியால் திமுகவில் புகையும் உள்கட்சி மோதல்…! குழப்பத்தில் டோஹ்ன்டர்கள்…!

திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் போதிய தொடர்பில்லாமல் விலகியிருப்பது கட்சித் தலைவர்…

52 minutes ago