திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

By Swetha on கார்த்திகை 12, 2026

Spread the love

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ரயில் ஓட்டுநர் பதற்றத்துடன் ரயிலை நிறுத்தப் பல கருவிகளை இயக்க முயல்வதும், பின்னணியில் ஒருவர் “எதுவுமே வேலை செய்யவில்லை” என்று கத்துவதும் பதிவாகியுள்ளது. இறுதியில் ரயில் பலத்த சத்தத்துடன் தடுப்புக் கம்பியில் மோதி குலுங்கி நிற்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

நவம்பர் 11, 2026 அன்று காலை 6.54 மணியளவில் அசாமின் திகாரு ரயில் நிலையத்தில் கொல்கத்தா-சைராங் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன.

   

https://www.instagram.com/reel/Dfl07TnDHSn/?utm_source=ig_web_button_share_sheet

   

ரயிலின் வேகத்தை ஓட்டுநரால் கட்டுப்படுத்த முடியாததே இந்த விபத்திற்குக் காரணம் என்று வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.