செல்வராகவன் குடும்பத்தில் தீராத பிரச்னை… அவரது சினிமா வீழ்ச்சிக்கு என்ன காரணம் – உண்மைகளை போட்டுடைத்த பிரபலம்!

By Elango on மார்கழி 22, 2025

Spread the love

கடந்த சில தினங்களில் இயக்குனர் செல்வராகவன் குறித்த விமர்சனம் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேஷ் இயக்குனர் செல்வராகவன் குறித்த பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, சொன்ன நேரத்திற்கு செல்வராகவன் படங்களை செய்யாததால் சில தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிப்படைந்தனர்.

சூர்யாவை வைத்து எடுத்த படம் என்ஜிகே, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் ஏற்பட்ட பட்ஜெட் குளறுபடிகள், செல்வராகவன் எந்த தயாரிப்பாளரையும் வாழ வைக்கவில்லை. பல தயாரிப்பாளருக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தினார். சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடிக்காதது தான் அவரது சினிமா வீழ்ச்சிக்கு காரணம். போதை பழக்கத்திற்கு ஆளாகி இதய நோய்களும் செல்வராகவனை பாதித்தது.

   

பின்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். இப்போது அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் டைரக்சனில் வேகம் எடுக்கவில்லை. இதனால் துரோகிகள், கடவுள் மீதான நம்பிக்கை போன்ற அவரது பதிவுகள் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

   

இந்நிலையில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் போட்டோக்களை நீக்கியதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு, விவாகரத்து என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் மனைவி சோனியா அகர்வாலை உயிருக்கு உயிராக காதலித்து திருமணத்துக்கு பிறகு செல்வராகவன் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். தனிமையில் அவதிப்பட்டபோது கீதாஞ்சலி அவர் மீது பரிதாபப்பட்டு திருமணம் செய்து கொண்டு 15 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தார்.

 

இப்போது மீண்டும் அவர்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. செல்வராகவனுக்கு நிறைய பிரச்னைகள். தனுஷ் தனது அண்ணனுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செய்துவிட்டார். இனி அவர்தான் ஒரு இயக்குனராக நிரூபிக்க வேண்டும். தனுஷூம் அவரது பெற்றோரும் தான் செல்வராகவனை மீட்டெடுக்க வேண்டும் என்று திண்டுக்கல் வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.