தமிழ் சினிமா சார்ந்த பல தகவல்களை பகிர்ந்து வருபவர் பிஆர்ஓ வித்தகன் சேகர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் வித்தகன் சேகர் கூறியதாவது, நடிகைகளுக்கு படவாய்ப்பு வாங்கி தரக்கூடிய இடத்தில் இருக்கும் அனைவருமே அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடியவங்க தான். ஆனால் எந்தவிதமான அட்ஜஸ்ட்மெண்டும் கேட்காத கண்ணியமான ஆண்களும் இருக்கிறார்கள்.
என்னிடம் ஒரு நடிகை, பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ரெடி என்று சொன்னார். நானும் ஒரு இயக்குனரிடம் அவரை அனுப்பி வைத்தேன். இதுவும் பிஆர்ஓ வேலைதான். ஆனால் நான் எந்த நடிகையிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டது இல்லை. நான் உத்தமன் வேஷம் போட விரும்பவில்லை. அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொன்ன நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் இயக்குனர்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.
அப்படி நடித்த ஒரு நடிகையின் படம் கூட கடந்தாண்டு வெளியானது. இப்போது நான் எந்த நடிகையையும் அட்ஜஸ்ட்மென்டுக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டேன். அதற்குக் காரணம் இப்படி நடிகைகள் எந்த திறமையும் இல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பை பெறுவதால் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து நடிக்கப் போன நடிகை சரியாகவே நடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் வருத்தப்பட்டார்.
இதனால் மனசாட்சி உறுத்தியதால் அந்த வேலையை இப்போது நான் செய்வதில்லை. அப்படி பல நடிகைகள் அட்ஜஸ்மென்டுக்கு ஓகே சார் என்று கூறுபவர்களிடம் அப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சினிமாவில் நீடித்து நிலைக்க முடியாது. திறமை இருந்தால் தான் நிச்சயம் வாய்ப்பு தேடி வரும் என்று அறிவுரை கூறியதாக வித்தகன் சேகர் அந்த நேர்காணலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
