சினிமா ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாள் என்று சொல்லலாம். அதுவும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனென்றால் இந்த வருடத்திற்கான பத்மபூஷன் விருது அஜித்குமாருக்கு கிடைத்துள்ளது. இவருடன் பலருக்கு பத்மஸ்ரீ விருதுக்கான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் அஜித்குமார் நடிகராக மட்டுமல்லாமல் பன்முக திறமைகள் கொண்டவர்.
கார் ரேசிங், பைக்கர், ரைபிள் ஷூட்டிங் சாம்பியன், போட்டோகிராபர் என பன்முக திறமைகளை தன்னுள்ளே கொண்டிருந்தவர். கார் ரேசிங் மீதான தனது ஆர்வத்தை விடாமல் அவ்வப்போது போட்டிகளில் கலந்து கொள்வார். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட கார் ரேசிங் போட்டியில் இவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. அனைவரும் அஜித் குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கிடைத்ததை கொண்டாடிவரும் நிலையில் ஒரு பிரபலம் அதுக்கு இவர் தகுதியே இல்லை என்று கூறியிருக்கிறார்.
வலைப்பேச்சு அந்தணன் என்பவர் அஜித் குமாருக்கு இந்த பத்ம பூஷன் விருது வாங்குவதற்கு தகுதி இல்லை. ஏனென்றால் அவர் ஒரு நடிகரே இல்லை. நடிகர் என்றால் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். எந்த ஒரு படம் வெளியே வந்தாலும் ஆடியோ லான்ச் பேட்டி போன்றவற்றில் கலந்து கொள்வார். ஆனால் எதிலுமே அஜித் கலந்து கொள்வதில்லை. தான் நடித்த படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவர் எப்படி நடிகராவார். அதனால் நடிகர் என்ற அடிப்படையில் அவருக்கு விருது வழங்கப்பட்டு இருக்காது.
அடுத்ததாக இவர் விளையாட்டுகளில் சிறந்து விளங்கி அதனால் இவருக்கு விருது கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் சரி இல்லை. ஏனென்றால் இப்போதுதான் அவர் கார் ரேசிங்கில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். அவரது அணி வெற்றி பெற்றது கூட அவர் காரை ஓட்டியதில்லை வேறு ஒருவர் ஒட்டி தான் வென்று இருக்கிறது. அதனால் விளையாட்டு வீரர் என்றும் கூட அவரை சொல்ல முடியாது. அதனால் அவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்தது அரசியல் தான். உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. அடுத்த ஆண்டு விஜய் தேர்தலில் களமிறங்க போகிறார் அவரை எதிர்க்க அஜித்தை தன் பக்கம் இழுக்க அவரது ரசிகர்களை திருப்புவதற்கு இந்த மாதிரி வேலைகள் நடக்கிறதே தவிர அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வாங்குவதற்குரிய தகுதி இல்லை என்று ஒரே போடாய் போட்டு பேசி இருக்கிறார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…