தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை இயக்கி உள்ளார். இப்படியான நிலையில் பாட்டில் ராதா பிரமோஷன் விழாவில் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் பா ரஞ்சித் முதலியை இயக்குனர்கள் கூடிய விழாவில் இயக்குனர் மிஸ்கின் பேச்சில் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியதும் இளையராஜா முதலான சிறந்த இசையமைப்பாளர்களை ஒருமையில் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான பேட் கேர்ள் திரைப்படத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின், என்னோட படங்கள் நல்ல படங்கள் இல்லையா, மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லவில்லையா. என் திரைப்பட வெற்றிக்கு பிறகு கமல் சாரிடமும் ரஜினி சாரிடமும் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் கதை கூறவில்லை. நான் நினைத்திருந்தால் எப்படியோ வெற்றி பெற்று இருக்கலாம். பிசாசு 2 படத்தில் என் தாய் நடிகை ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி ஒன்று தேவைப்பட்டது. கதையை அவர்கிட்ட சொல்லி அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார்.
ஒரு தாய்மையின் உணர்வுக்குள் இருந்து எடுக்க வேண்டிய காட்சிகள் அது. அதை எடுப்பதற்காக பெண் போட்டோகிராபர் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்து விட்டேன். ஆண்ட்ரியாவும் அதற்கு தயாராகி விட்டார். ஆனா அன்னைக்கு என்னோட அசிஸ்டன்ட் டைரக்டரை உள்ள அனுப்பிவிட்டு நான் என்னோட ஆபிசுக்கு வந்துட்டேன். உடனே ஆண்ட்ரியா போன் பண்ணி எங்க இருக்கீங்க சார் என்று கேட்டார்கள், நான், அம்மா உன்னோட அந்த நிர்வாண காட்சியை நான் போட்டோவாக எடுத்து போஸ்டரை வெளியிட்டா இந்த படம் கட்டாயம் வெற்றி பெற்றும்.
உன் நிர்வாணத்தை காண்பித்து நான் பெயர் புகழ் என எல்லாத்தையும் வாங்கி விடலாம். ஆனால் நான் பார்க்கும் இலக்கிய கண் கொண்டு அந்த போஸ்டரை எல்லோரும் பார்க்க மாட்டார்கள் என்று ஆண்ட்ரியா கிட்ட சொல்லிட்டு அந்த காட்சியை வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அந்த போஸ்டரை மட்டும் அன்னைக்கு நான் வெளியிட்டு இருந்தால் படம் எப்பையோ ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றிருக்கும். ஆனா இரண்டு வருடமா அந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. நான் சினிமாவை நேசிப்பவன். இதைத் தவிர எனக்கு வேறு வேலைகளே இல்லை என்று மிஸ்கின் கூறியுள்ளார்.
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…