தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் அல்லது பரிசுத் தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் பேசுகையில், “மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இது குறித்து விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பொங்கல் பரிசாக ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தலா ₹5,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும்” என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
