திக் திக் நிமிடங்கள்… திடீரென கடைக்குள் பாய்ந்த கார்… கொதிக்கும் எண்ணெயில் கதறிய மக்கள்… பெங்களூரில் நடந்த பகீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

Spread the love

பெங்களூரின் எல்லைப்பகுதியான பன்னேருகட்டா அருகே உள்ள ஹோம்மதேவனஹள்ளியில், அதிவேகமாக வந்த மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்ஸ் ரக சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் இருந்த ‘ஹலேவூரம்மா கெபாப் சென்டர்’ என்ற உணவகத்திற்குள் புகுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. கடந்த 28-ஆம் தேதி நடந்த இந்த விபத்தில், காரின் பதிவெண் KA-05-MR-3925 என்பதும், அதை சஜினா பேகம் என்ற பெண் ஓட்டி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்த வேகத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல இருசக்கர வாகனங்கள் நசுங்கி சேதமடைந்தன. மேலும் உணவகத்திற்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமாகின. விபத்தின் பயங்கர தாக்கத்தால், கெபாப் தயாரிப்பதற்காக அங்கே கொதித்துக்கொண்டிருந்த சூடான எண்ணெய் எதிர்பாராதவிதமாக அங்கிருந்தவர்கள் மீது தெளித்தது. இதில் பசவராஜ், முனிகிருஷ்ணா மற்றும் மங்கேஷ் ஆகிய மூன்று பேருக்குக் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

தீக்காயமடைந்த மூன்று நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது மேடெக்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்துத் தகவலறிந்த பன்னேருகட்டா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்திற்குக் காரணமான காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரை ஓட்டி வந்த பெண்ணைக் காவலில் எடுத்து விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… காவல் நிலையத்தில் காவலரால் பாலியல் வன்கொடுமை… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சரைகேலா-கர்சாவான் மாவட்டத்தில், குடும்பத் தகராறு குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, காவலர்…

9 minutes ago

என் வீட்டுக்கு வா!… திரையுலகின் தனிப்பட்ட பார்ட்டி கலாச்சாரம்… நள்ளிரவில் காரில் நடந்த தகராறு… நடுரோட்டில் வெடித்த சர்ச்சை…!!

அவளது வீட்டின் வாயிலில் வண்டி நின்றபோதும் அவனது குரலில் விடாப்பிடியான பிடிவாதம் குறையவில்லை. பணி முடிந்து களைத்திருந்த அந்த இரவில்,…

13 minutes ago

திக்… திக்… வாட்ஸ்அப் சண்டையால் கொடூரம்… 2 சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொலை… அதிர வைக்கும் பின்னணி… சூரத்தைக் உலுக்கிய பகீர் சம்பவம்…!!

சூரத்தின் அத்வா மற்றும் அத்வாலைன்ஸ் எல்லைப் பகுதிக்குட்பட்ட நான்புரா மட்டன் மார்க்கெட் அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முகமது…

14 minutes ago

ஐயோ பாவம்… காதலருக்கு கடைசி மெசேஜ் அனுப்பிய இளம் துணை விமானி… புளோரிடாவில் ஒன்பது உயிர்களைப் பறித்த கோர லியர்ஜெட் விபத்து… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

புளோரிடாவில் நடந்த கோரமான லியர்ஜெட் விமான விபத்தில், அதில் பயணித்த ஒன்பது பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு…

21 minutes ago

உங்களுக்கே இப்படியா?… வாட்ஸ்அப் சாட்டிங்… ரூ.29 லட்சம் மோசடி… காவலருக்கே ஆப்பு வைத்த சைபர் கில்லாடி…!!

ஹைதராபாத் கச்சிபௌலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு, முகநூலில் 'சுகன்யா ரெட்டி' என்ற பெயரில் அறிமுகமான மர்ம…

22 minutes ago

ஐயோ… என்ன கொடுமை?… 1st AC-க்கே இந்த நிலைமையா?… 4 தடவை செயினை இழுத்தும் யாரும் வரல… ரயிலில் ரூ 2.5 லட்சம் கொள்ளை… கதறும் பெண் பயணி… லக்னோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

லக்னோ ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. லக்னோ ரயில் நிலையத்தில் 15726 எண்ணுள்ள…

27 minutes ago