திக் திக் நிமிடங்கள்… திடீரென கடைக்குள் பாய்ந்த கார்… கொதிக்கும் எண்ணெயில் கதறிய மக்கள்… பெங்களூரில் நடந்த பகீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

By Swetha on கார்த்திகை 3, 2026

Spread the love

பெங்களூரின் எல்லைப்பகுதியான பன்னேருகட்டா அருகே உள்ள ஹோம்மதேவனஹள்ளியில், அதிவேகமாக வந்த மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்ஸ் ரக சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் இருந்த ‘ஹலேவூரம்மா கெபாப் சென்டர்’ என்ற உணவகத்திற்குள் புகுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. கடந்த 28-ஆம் தேதி நடந்த இந்த விபத்தில், காரின் பதிவெண் KA-05-MR-3925 என்பதும், அதை சஜினா பேகம் என்ற பெண் ஓட்டி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்த வேகத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல இருசக்கர வாகனங்கள் நசுங்கி சேதமடைந்தன. மேலும் உணவகத்திற்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமாகின. விபத்தின் பயங்கர தாக்கத்தால், கெபாப் தயாரிப்பதற்காக அங்கே கொதித்துக்கொண்டிருந்த சூடான எண்ணெய் எதிர்பாராதவிதமாக அங்கிருந்தவர்கள் மீது தெளித்தது. இதில் பசவராஜ், முனிகிருஷ்ணா மற்றும் மங்கேஷ் ஆகிய மூன்று பேருக்குக் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

   

தீக்காயமடைந்த மூன்று நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது மேடெக்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்துத் தகவலறிந்த பன்னேருகட்டா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்திற்குக் காரணமான காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரை ஓட்டி வந்த பெண்ணைக் காவலில் எடுத்து விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.