ஹைதராபாத் கச்சிபௌலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு, முகநூலில் ‘சுகன்யா ரெட்டி’ என்ற பெயரில் அறிமுகமான மர்ம நபர் நண்பர் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட காவலரிடம் வாட்ஸ்அப் வாயிலாக இனிமையாகப் பேசி நெருக்கத்தை ஏற்படுத்திய அந்த நபர், ‘டார்வின் எக்ஸ் குளோபல்’ என்ற ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பெரும் லாபம் ஈட்டலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிய காவலர், தொடக்கத்தில் சிறிய தொகையை முதலீடு செய்து லாபம் கிடைப்பது போன்ற போலியான கணக்கைக் கண்டதும், பல்வேறு வழிகளில் நிதி திரட்டி அடுத்தடுத்து சுமார் ரூ.29.20 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.
அவரது கணக்கில் ரூ.76 லட்சம் லாபம் சேர்ந்திருப்பதாகத் திரையில் காட்டிய மோசடிக் கும்பல், அந்தப் பணத்தை எடுக்க வேண்டுமானால் தனியாக ரூ.12 லட்சம் சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்தது. இதனால் சந்தேகமடைந்த காவலர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். அரசு ஊழியர் ஒருவரையே குறிவைத்து, சமூக வலைத்தளம் மூலம் நயவஞ்சகமாகப் பேசி லட்சக்கணக்கில் சுருட்டிய இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு வடக்கு தாலுகாவிற்குட்பட்ட கடசோம்மனஹள்ளி கிராமத்தில், தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக சாலை அமைப்பதாக எழுந்த தகராறு வன்முறையாக மாறியதால் பெரும்…
சாலையின் நடுவிலோ அல்லது சந்திப்புக்குச் சற்று முன்பாகவோ சட்டென்று பேருந்தை நிறுத்துவது மிகவும் ஆபத்தானது. பயணி சைகை காட்டினார் என்பதற்காக,…
முசாபர்நகரின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ளாக அமைந்துள்ள சாக்கெட் காலனியில், ஒரு சந்துக்குள் புர்கா அணிந்து நின்றுகொண்டிருந்த மாணவியிடம் ஃபர்மான்…
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல கேதர்தால் மலையேற்றப் பாதையில் பயணம் மேற்கொண்ட ஏழு மலையேறுபவர்கள் மற்றும் ஒரு…
துருக்கியின் நெவ்செஹிர் பகுதியில் உள்ள ஒரு பணியிடத்தின் முன்பாக நின்று கொண்டிருந்த பெண்ணை, நபர் ஒருவர் திடீரென முகத்தில் அறைந்து…
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சரைகேலா-கர்சாவான் மாவட்டத்தில், குடும்பத் தகராறு குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, காவலர்…