திக்… திக்… திக்… பள்ளிக்கூடமா?… மரணக் களமா?… கதறக் கதற மாணவியின் முகத்தை ரம்பத்தால் அறுத்த கொடூரன்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 31, 2026

Spread the love

பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த சிறுமியை சங்கிலி ரம்பத்தால் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறுமியின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளிக்குச் சென்ற இடத்தில் நடைபெற்ற இந்தத் திடீர் வெறிச்செயல், சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் உரையவைத்துள்ளது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், காயமடைந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடியதால், அந்தப் பகுதியே சில மணி நேரம் பெரும் பதற்றமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள், பள்ளி வளாகத்திற்குள் அந்த நபர் எப்படி நுழைந்தார் என்பது குறித்தும், தாக்குதலுக்கான பின்னணி மற்றும் நோக்கம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிப் பருவச் சிறுமி மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனமும் கொந்தளிப்பும் தெரிவித்து வருகின்றனர்.