அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

By Swetha on கார்த்திகை 13, 2026

Spread the love

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. போரிவலியில் இருந்து விரார் நோக்கிச் சென்ற ரயிலில் நாய்காவ் ரயில் நிலையம் அருகே இந்த கொடூரம் நடந்துள்ளது. ரயிலில் இருந்து கீழே விழுந்த அந்தப் பெண்ணின் இடது கை சக்கரத்தில் சிக்கி துண்டானதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு 16 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட 53 வயதான ஜிதேந்திர ஹிர்முகே என்பவர், சம்பவத்திற்குப் பிறகு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து சர்வ சாதாரணமாக தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த அவர், பயணிகள் கூட்டத்திற்கு இடையே வேகமாக நடந்து செல்வதும், பதற்றத்துடன் நெற்றியைப் பிடித்தபடி நிலையத்தை விட்டு வெளியேறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

   

சமூக வலைதளங்களில் இந்த சிசிடிவி காட்சிகள் வேகமாகப் பரவி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த குற்றவாளியை சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். இந்தச் சம்பவம் மும்பை புறநகர் ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.