திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 13, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரத் தாக்குதல் காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து கான்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஒரு பெண்ணுடன் தொடர்புடைய தகராறே இந்தக் கொலைக்கான காரணமாக இருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

   

https://twitter.com/IndiaToday/status/2120688418485305673/video/1

   

இந்தக் கொலை தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் காவல்துறையினர் ஏற்கனவே பிடித்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.