கோரா கனக் அருகே உள்ள புதர் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் தலையில் கூர்மையான ஆயுதத்தால் பலமாகத் தாக்கப்பட்டதற்கான காயங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தடயங்களைச் சேகரிக்கும் பணியில் தடயவியல் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
https://twitter.com/thelucknowtimes/status/2117227421460291940/video/2
உயிரிழந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்களை அறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
