குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில், குடும்பத்தின் சமயச் சடங்கு பாரம்பரியம் தொடர்பான தகராறில் 10 வயது சிறுவன் ஒருவன் அவனது தந்தையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை ஒரு கோயிலுக்கு அருகில் வைத்து, அவனது தந்தையே கால்களைப் பிடித்து தரையில் அடித்து, மரக் கட்டையால் தலையில் தாக்கியதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தனது மகன் ‘புவோ’ ஆக மாறுவதை அந்தத் தந்தை விரும்பாததே இந்த கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது. இந்த மத ரீதியான சடங்கில் ஈடுபடக் கூடாது என்று கூறி சிறுவனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முடிவில் கொலையில் முடிந்துள்ளது.
மேலும், இச்சம்பவத்தின் மற்றொரு திடுக்கிடும் தகவலாக, கொலையைச் செய்த தந்தை, ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகனின் உடலுக்கு அருகிலேயே ஒரு கட்டிலில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
