அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… நள்ளிரவில் நடுத்தெருவில் தவித்த சிறுவன்… தந்தையே செய்த கொடூர செயலா?… ஃபதேகஞ்சில் பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஆவணி 24, 2026

Spread the love

ஃபதேகஞ்ச் பகுதியில் நள்ளிரவில் வீதியோரம் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன், பொதுமக்களின் உதவியுடன் தற்போது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தனது தந்தை தன்னை நீர்நிலைக்கு அருகே விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளான். இருப்பினும், இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. சிறுவன் அதிர்ச்சியில் இருப்பதால், இது குறித்த மேல் விவரங்களை அறிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

https://twitter.com/rameshofficial0/status/2091829577308123466/video/1

   

தனது கிராமத்தின் பெயரையோ அல்லது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் விபரங்களையோ சிறுவனால் கூற இயலவில்லை. எனவே, படத்திலிருக்கும் இந்த சிறுவனை அடையாளம் தெரிந்தவர்களோ அல்லது இவனது குடும்பத்தினரைப் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தவர்களோ, உடனடியாக ஃபதேகஞ்ச் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, சிறுவனை அவனது குடும்பத்தினருடன் சேர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.