அதிர்ச்சி… தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு… முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல்?… நிதி அமைச்சர் பகீர் எச்சரிக்கை…!

By Swetha on ஆடி 27, 2026

Spread the love

சென்னையில் நடைபெற்ற ‘முதல்வரின் கரம்’ நிகழ்வில் பங்கேற்ற நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், 2026-இல் தமிழகத்தில் ஏற்பட்டது போல 2029 மக்களவைத் தேர்தலிலும் மாபெரும் மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட்டார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர முயற்சிகள் மூலம் நீட் தேர்வு நிச்சயமாக முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும், அதனால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சட்டப்பேரவையில் சிலர் வரைமுறையின்றி பேசுவதாகவும், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு இன்னும் மூன்று மாதங்களில் கவிழ்ந்துவிடும் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் சாடினார். பார்ட்டி ஃபண்ட் குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசியபோது சிலர் பதிலளிக்க முடியாமல் வெளியேறியதைச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் அவதூறாகப் பேசுபவர்களுக்கு நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள ஊழல் பட்டியல் மூலமாகவே தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

   

தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஊழல் வழக்குகளில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்காகத் தயார் செய்யப்பட்டு வரும் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.