“எக்ஸ்ட்ரா ஸ்மோக் ஃபிளேவர் போல…” வெங்காயத்துடன் ஃப்ரீயாக வந்த சர்ப்ரைஸ்…! சோஷியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படப் பதிவு…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த பிரியம் தஹாபில்தர் என்ற வாலிபர், ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலம் பாவ் பாஜி ஆர்டர் செய்துள்ளார். பார்சல் வந்து சேர்ந்ததும் உணவைத் திறந்து பார்த்த அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உணவோடு கொடுக்கப்பட்டிருந்த நறுக்கிய வெங்காயக் கலவையின் மேல், யாரோ குடித்துவிட்டுப் போட்ட முழுமையாகப் புகைக்கப்பட்ட பீடி ஒன்று கிடந்துள்ளது.

இந்த அருவருக்கத்தக்கச் சம்பவத்தைத் புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “நான் ஆன்லைனில் பாவ் பாஜி ஆர்டர் செய்தேன், இலவசமாக ஒரு பீடி கிடைத்துள்ளது; அதுவும் முழுவதும் புகைக்கப்பட்டது” என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, வாடிக்கையாளர் சேவை மையத்தின் மூலம் அவருக்கு அடுத்த ஆர்டருக்காக ரூ.100 கூப்பன் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

   

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “உணவில் எக்ஸ்ட்ரா ஸ்மோக் ஃபிளேவர் சேர்க்கப்பட்டுள்ளது” என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வந்தாலும், உணவகங்களில் நிலவும் இதுபோன்ற தீவிரமான சுகாதாரமற்ற சூழல் மற்றும் ஆன்லைன் டெலிவரி தளங்களின் அலட்சியப் போக்கு குறித்துக் கடுமையான கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.