ராக்கி கட்ட ஆசைப்பட்டாள்…! “கட்டப்பட்ட கைகள்… சித்திரவதை அனுபவித்த சிறுமி…” இறுதிச்சடங்கு முடிந்த 3 மணி நேரத்தில் பிறந்த ஆண் குழந்தை…! கோரக்பூரில் நெஞ்சை உலுக்கிய சோகம்…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், காவலர் அபிஷேக் யாதவ் (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிலையில், அடுத்த 3 மணி நேரத்திலேயே அச்சிறுமியின் தாயார் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். வரவிருக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகைக்குத் தன் தம்பிக்கு ராக்கி கட்ட வேண்டும் என்று அச்சிறுமி ஆசைப்பட்டதாகக் கூறி, பிறந்த குழந்தையைப் பார்த்து தாயும் சகோதரிகளும் கண்ணீர் விட்டு அழுது துடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காவலர் அபிஷேக் யாதவ் சிறுமியைச் சுடுகாட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, அவரது கைகளைக் கட்டி உயிருடன் ஆற்றில் வீசியது தெரியவந்துள்ளது. இதில் சிறுமியின் தலை பாறையில் மோதி, நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் கழுத்து, கால்கள் உட்பட 5 எலும்புகள் முறியப்பட்டு, வயிற்றுப் பகுதி கிழிந்து கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. சீருடைக்கே களங்கம் விளைவித்த இந்தக் கொடூரக் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.