தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை” செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதிப்படி ஜூன் 23 அன்று இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இதற்காக ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 4,41,667 தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரங்கள் அனைத்தும் 22 காரட் தூய்மையுடனும், கட்டாயமாக 916 தரச்சான்றிதழுடனும் இருக்க வேண்டும் என டெண்டர் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பொருந்தும் இத்திட்டத்தை, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்திற்கான டெண்டர் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அன்றைய தினமே பிற்பகல் 12 மணிக்குத் தகுதியான டெண்டர்தாரர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்குப் பயன் தரும் வகையில் இத்திட்டம் மிக விரைவில் முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…