விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு அன்று இரவு பெற்றோருடன் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைத் தேட 8 தனிப்படைகளை அமைத்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று சோதனையிட்டு விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற தடய அறிவியல் நிபுணர் தலைமையிலான குழுவினர் சிறுமியின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியைக் கண்டுபிடிக்க வீட்டைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரிகள், கிணறுகள் மற்றும் மலைக் குகைகளில் 50 ட்ரோன்கள் மூலம் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தீயணைப்புத் துறையினரும், மரக்காணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி ஆழமான கிணறுகளில் வலைவீசியும் சிறுமியைத் தேடி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…