தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. தவெக தனித்துப் போட்டியிட்டதால் கூட்டணிக் கட்சிகளின் பலம் இல்லை. இருந்தபோதிலும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளதால், விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க தவெக தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்துள்ளனர். அதே வேளையில், அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க தவெக தரப்பிலிருந்து தலா ரூ. 50 கோடி வரை பேரம் பேசப்படுவதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் விலை போவதைத் தடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை ரத்து செய்த அவர், தனது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மேலும், சுமார் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்க வைத்துள்ளார். கட்சித் தலைமை உத்தரவிடும் வரை யாரும் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என எம்.எல்.ஏ-க்களுக்குக் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை சட்டசபையில் தவெக-வால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், அடுத்த பெரிய கட்சிகளான திமுக அல்லது அதிமுக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டு வருவதாகவும், அதற்காகவே எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாப்பாகத் தங்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொருபுறம், தலைமைச் செயலகத்திற்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க கேட் பகுதிகளில் போலீசார் எண்ணெய் தடவி வினோத பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவது தமிழக அரசியலில் உச்சகட்ட பதற்றத்தைக் காட்டுகிறது.
தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…
2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சி, ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டு வந்த கான்வாய் வாகனங்கள் (பாதுகாப்பு வாகனங்கள்) திரும்பப்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு கால அரசியலை தலைகீழாக மாற்றியுள்ளன. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின்…
மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முக்கியத்…