விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தை பற்றி அழகாக எடுத்துரைக்கின்றனர். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், அன்பு ,பாசம் என அனைத்தையும் இந்த சீரியல் காட்டி வருவதால் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூறலாம்.

கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலானது 5 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தொடங்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் TRP யிலும் முன்னிலை வகித்தது. இந்த சீரியலில் ஸ்டாலின் , சுஜிதா, ஹேமா, கதிர், ஜீவா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர்.

முக்கியமாக இந்த சீரியலில் முல்லை கதாபத்திரத்தில் முதன்முதலாக நடித்த நடிகை சித்ராவை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு தங்களது இறுதி பயணத்தை கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் இன்று 28 அக்டோபர் 2023, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு தொடரை முடித்துள்ளனர். சீரியல் நடிகர்கள் அனைவருக்கும் இருக்க சுபம் என தொடரை முடித்துள்ளனர். மேலும் வருகிற 30 ஆம் தேதியிலிருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒளிபரப்பாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram
