“டாக்டர்களே வாயடைச்சு போயிட்டாங்க… சிசேரியன் இல்ல.. வெறும் சுகப்பிரசவம் தான்… 4 குழந்தைகளை அசாத்தியமாக பெற்றெடுத்த 31 வயது தாய்.. குவியும் வாழ்த்துகள்!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

உத்தரப் பிரதேசம் மொராதாபாத் பகுதியில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அரிய மருத்துவ நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சம்பல் பகுதியைச் சேர்ந்த 31 வயதான அமீனா என்ற பெண்மணி, எவ்வித அறுவை சிகிச்சையுமின்றி 5 நாட்கள் இடைவெளியில் நான்கு குழந்தைகளைச் சுகப்பிரசவம் மூலம் பெற்றெடுத்துள்ளார். கடந்த மே 9-ஆம் தேதி அவருக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில், தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவருக்கு, மீதமுள்ள மூன்று குழந்தைகளும் மே 14-ஆம் தேதி பிறந்துள்ளன.

நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கும் (Quadruplets) அரிய சூழல்களில் பொதுவாக சிசேரியன் முறையே தேர்வு செய்யப்படும். ஆனால், இந்த பிரசவம் முழுவதும் இயல்பான முறையில், சுகப்பிரசவமாக நடந்து முடிந்ததுதான் மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கின் மிக முக்கிய அம்சமாக மருத்துவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், அந்த நான்கு குழந்தைகளும் தாயின் வயிற்றில் தனித்தனி பனிக்குடங்களில் (Separate amniotic sacs) வளர்ந்துள்ளன என்பதுதான்.

   

கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அமீனாவுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் இருந்ததால், மருத்துவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. இருப்பினும், மருத்துவக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சரியான நேரத்தில் எடுத்த தீவிர சிகிச்சை நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆபத்தான பிரசவம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது தாயும், நான்கு குழந்தைகளும் முற்றிலும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.