சாதாரண சளி, காய்ச்சல்னு நினைச்சாங்க.. ஆனா எக்ஸ்ரே-வில் காத்திருந்த பேரதிர்ச்சி..! உ.பி-யில் நெஞ்சை பதறவைத்த சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில், ஒன்றரை வயதுக் குழந்தையின் மூச்சுக்குழாயில் கடந்த 25 நாட்களாகச் சிக்கியிருந்த 2 இன்ச் நீளமுள்ள டூத்பிரஷ் , மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. கட்கா காவல் எல்லைக்குட்பட்ட புல்வாரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் குமார் என்பவரின் ஒன்றரை வயது மகன் ஆயுஷ், கடந்த மே 4-ஆம் தேதி வீட்டில் டூத்பிரஷ்ஷுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது குப்புற விழுந்துள்ளான். அப்போது அவனது வாயிலிருந்த பிரஷ்ஷின் முன்பகுதி எதிர்பாராதவிதமாக மூச்சுக்குழாய்க்குள் சென்று சிக்கிக்கொண்டது.

குழந்தை அழுதபோது, கீழே விழுந்த அதிர்ச்சியால் அழுகிறான் என்று நினைத்த தாய், அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவர் தொண்டையில் வீக்கம் இருப்பதாகக் கூறி மருந்து கொடுத்துள்ளார். ஆனால், குழந்தையின் நிலைமை சரியாகாமல் காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டுள்ளது. 23 நாட்களாகப் பெற்றோர் தொண்டை வீக்கத்திற்கான மருந்தையே கொடுத்து வந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர்கள் குழந்தையை காது, மூக்கு, தொண்டை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் குழந்தையின் மூச்சுக்குழாயில் டூத்பிரஷ் சிக்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

நீண்ட நாட்களாக பிரஷ் உள்ளே இருந்ததால், அதைச் சுற்றி தசைப் படலம் உருவாகியிருந்ததுடன், குழந்தையின் நெஞ்சுப் பகுதியிலும் தொற்று ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, சுமார் 7 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் முதலில் நெஞ்சுத் தொற்றைக் குணப்படுத்தி, பின்னர் வெள்ளிக்கிழமை அன்று குழந்தைக்கு அதிநவீன அறுவை சிகிச்சை செய்து டூத்பிரஷ்ஷை வெளியே எடுத்தனர். தற்போது குழந்தை நலமாக இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

9 மணத்தியாலங்கள் ago