“அதிமுக டூ தவெக?”… விஜய் கதவை தட்டும் முன்னாள் அமைச்சர்.. அலறியடித்து தடுத்த சீனியர்கள்…. பின்னணியில் டெல்லி ஸ்கெட்ச்….!

Spread the love

! பின்னணியில் டெல்லி ஸ்கெட்ச்?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகிகளின் அடுத்தகட்ட நகர்வுகளும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அக்கட்சியின் 4 எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள சம்பவம் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் பல மூத்த நிர்வாகிகள் தவெகவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி அணிகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன. இருப்பினும், சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இரு முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல் தங்களின் தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் குறித்து தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப் போவதாக அவர் அறிவித்துள்ள போதிலும், அவர் தவெகவில் இணைவதற்கே முழு வீச்சில் திட்டமிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி அணியில் தமக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும், பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் கருதும் விஜயபாஸ்கர், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மூலம் விஜய்யின் கட்சியில் இணைய தீவிர அழுத்தம் கொடுத்து வருகிறார்.

விஜயபாஸ்கரின் இந்த முயற்சிக்கு தவெகவின் உள்ளேயே தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் மீது குட்கா ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சிபிஐ மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் உள்ளன. தங்களை ஊழலுக்கு எதிரான ஒரு தூய்மையான அரசியல் சக்தியாக மக்கள் மத்தியில் முன்னிறுத்த தவெக தலைமை விரும்புகிறது. இந்நிலையில், ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முன்னாள் அதிமுக அமைச்சர்களைக் கட்சியில் இணைத்தால், கட்சியின் “தூய்மை பிம்பம்” உடைந்து மக்கள் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் சீனியர்கள் கவலைப்படுகின்றனர்.

இதற்கிடையே, விஜயபாஸ்கரின் இந்த அரசியல் நகர்வுகளின் பின்னணியில் டெல்லி பாஜக மேலிடத்தின் சில திட்டங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிபிஐ வளையத்தில் இருக்கும் விஜயபாஸ்கரை கட்சியில் சேர்ப்பதன் மூலம், டெல்லியின் கோபத்திற்கு தவெக ஆளாக நேரிடும் என்றும் மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கின்றனர். தேவையற்ற அரசியல் சேதாரங்களைத் தவிர்க்க விஜயபாஸ்கரை தவெகவில் இணைக்கக் கூடாது என்பதில் ஒரு தரப்பினர் பிடிவாதமாக இருப்பதால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் தவெக தலைமை தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago