வாயில் கல்லை திணைத்து, உதட்டில் ஃபெவிக்விக் ஒட்டி… பாறைகளுக்கு நடுவே புதைக்கப்பட்ட 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… திடுக்கிடும் சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

சமூகத்தின் கவனக்குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் பீல்வாரா மாவட்டம் பிஜோலியா பகுதியில் உள்ள காட்டில் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் உதடுகளில் ஃபெவிக் வீக் ஒட்டப்பட்டு வாயில் கல் திணிக்கப்பட்டு, வெப்பமூட்டிய கற்களின் கீழ் மறைக்கப்பட்டிருந்தது. அருகில் மாடு மேய்ச்சலுக்காக சென்ற ஒரு நபர் இதை கவனித்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

உடனே கிராம மக்கள் தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் உடலில் எரிச்சல் மற்றும் காயங்கள் காணப்பட்டதுடன் வாயை மூடு இருந்த பெவிக் வீக் சுவாசிக்க தடையாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

   

தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தையின் எடை சுமார் 3.1 கிலோ இருந்தாலும் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 குழந்தைகள் பிறந்த பிறகு இப்படி கைவிடப்பட்டதாகவும் அவர்களை பாதுகாக்க அரசு மற்றும் சமூக நலத்துறை இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.