5 நாட்கள்… 30 காம மிருகங்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… ஹோட்டல்களில் நடந்த பகீர் சம்பவம்… கொந்தளிக்கும் மக்கள்…!

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, ஐந்து நாட்களாக முப்பதுக்கும் மேற்பட்டோரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் வீட்டில் இருந்து காணாமல் போன அச்சிறுமியை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கடத்திச் சென்று ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் விற்றுள்ளார். அதன் பின்னர், அங்குள்ள பல்வேறு சட்டவிரோத ஹோட்டல்களுக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட அந்தச் சிறுமி, தொடர்ந்து ஐந்து நாட்களாக மிருகத்தனமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரத்தின் போது சிறுமிக்கு ஏற்படும் கடுமையான வலியை மறக்கடிப்பதற்காக, அவரை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்துள்ள அதிர்ச்சி தகவலும் சிறுமியின் வாக்குமூலம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தில் இருந்து எவ்வாறோ தப்பித்து வீடு திரும்பிய சிறுமி, தன் பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல ஹோட்டல் அதிபர்கள் மற்றும் மேலாளர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் நடந்த பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஹோட்டல்கள் எவ்வித அனுமதியுமின்றி இயங்கி வருவது தற்போதைய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இக்கொடூரச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடத்தலுக்குக் காரணமான ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், இந்த விவகாரம் காவல்துறையினரின் ஒட்டுமொத்த தோல்வியைக் காட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக நீதி கிடைக்காவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Visaka

Recent Posts

“5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்”…. 200 பேருந்துகள், 7 மணி நேரப் பயணம்… அதிமுக காலி?… ஒரே நாளில் தவெக-வில் இணையும் 100 முக்கிய தலைவர்கள்… செம குஷியில் விஜய்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…

6 minutes ago

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

11 minutes ago

தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…

12 minutes ago

“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…

24 minutes ago

அம்மாவின் ஆனந்தக் கண்ணீர்… வரலாற்று வெற்றிக்கு பின் மொராக்கோ வீரர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… உருகும் இணையம்…!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…

24 minutes ago

“புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா?”…. பேருந்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… மதுபோதையில் எல்லை மீறிய வாலிபர்…. அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…

29 minutes ago