Connect with us

CINEMA

‘நட்ட நடு ரோடு… நடுராத்திரி… திக் திக் நிமிடங்கள்’… ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட பாக்கியலட்சுமி செல்வி…

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி இந்த நாடகம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்த சீரிய தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. TRP யிலும் தொடர்ந்து முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

   

இந்த சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கம்பன் மீனா.  இந்த சீரியலில் இவர் வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார் . பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார் நடிகை கம்பம் மீனா. இவர் இந்த சீரியலில் மட்டுமின்றி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து முடிந்த காட்சியின் வீடியோவை ‘பாக்யலட்சுமி மூணாறு படப்பிடிப்பின் திக் திக் நிமிடங்கள்.. நட்ட நடு ரோடு.. நட்ட நடு ராத்திரி (இரவு 2.30)… அப்படியே பனிமூட்டத்திற்கு நடுவில்’ என்று கூறி வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

author avatar
Continue Reading

More in CINEMA

To Top