“என் பொண்டாட்டி மட்டும் இல்லனா அவ்ளோதான்”…. மேடையில் கண்கலங்கி பேசிய மனோஜ் பாரதிராஜா….!!

By admin on புரட்டாதி 14, 2023

Spread the love

இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷியாம், ரக்ஷனா, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, சிவகுமார், பாரதிராஜா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

   

இந்நிலையில் படத்தின் இயக்குனர் மனோஜ் பாரதிராஜா கூறியதாவது, இயக்குனர் ஆக வேண்டும் என்கிற எனது 18 ஆண்டுகால போராட்டம் நிறைவேறிவிட்டது. நான் இயக்குனர் ஆக ஆசைப்பட்டேன். ஆனால் எனது அப்பா என்னை நடிக்கும்மாறு வற்புறுத்தினார். நான் நடித்த தாஜ்மஹால் திரைப்படம் வெளியாகி சில ஆண்டுகள் ஆன பிறகும் நான் பிரபல நடிகராக உருவாகவில்லை.

   

 

இப்போது நான் ஆசைப்பட்டபடி இயக்குனர் ஆகிவிட்டேன். முதல் நாள் ஷூட்டிங்கில் எனது அப்பாவுக்கு சீன் சொல்லிக் கொடுத்தேன். அப்போது என்னடா என்னை பழி வாங்குகிறாயா? என கேட்டார். அப்பா படத்தில் அருமையாக நடித்துள்ளார். முக்கியமாக நான் எனது மனைவியும் மற்றும் பிள்ளைகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் . என் மனைவி மட்டும் இல்லை என்றால் நான் அவ்வளவுதான் எனக் கூறி மனோஜ் பாரதிராஜா கண்கலங்கி பேசியுள்ளார்.