நடிகை அபிதா தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக சேது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவும், சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் நடித்ததற்காகவும் அபிதா புகழ் பெற்றார். சமீபத்தில் அபிதா அளித்த பேட்டியில் கூறியதாவது, நடிகர் ராமராஜனுடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் குடும்ப பெண்ணாக நடித்தேன்.

அதேநேரம் நடிகர் ராமராஜன் தனது மனைவி நளினியிடம் விவாகரத்து வாங்கி இருந்தார். நான் படபிடிப்பின் போது நடிகர் ராமராஜனுடன் அவ்வளவாக பேசியது கூட கிடையாது. நடிகை நன்னியும் படப்பிடிப்புக்கு வந்தது இல்லை. அப்படி இருக்க அவர்களது விவாகரத்திற்கு நான் தான் காரணம் என வதந்தி பரவியது. அவர் என்னை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்தி பரவியதால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனையடுத்து தான் எனக்கு திருமதி செல்வத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து என கூறினார்.
View this post on Instagram
