நடிகர் துல்கர் சல்மானின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுமி விஷால் பட ஹீரோயின் மகளா?… ஷாக்கில் ரசிகர்கள்…

By Begam on ஆவணி 24, 2023

Spread the love

மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் மம்மூட்டி. இவரின் ஒரே மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.

   

இவர் தற்பொழுது மலையாளத்தில் ‘கிங் ஆப் கோத்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தின் விளம்பர பலகைகளில் இப்படம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது .

   

 

‘தாமிரபரணி’ படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை முக்தா. இவர் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் இவருக்கு 2016ஆம் ஆண்டு கியாரா என்ற ஒரு மகள் பிறந்தார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் இவர் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் பொழுது அவரின் மடியில் அமர்ந்திருக்குமாறு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்…