நாட்டு நாட்டு பாடலைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதை வென்ற இந்திய ஆவண குறும்படம்…. வைரலாகும் புகைப்படங்கள்…

By Archana

Published on:

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற இந்திய ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படம் பிறவியில் ஆஸ்கர் விருதை வென்று உள்ளது. முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மை மற்றும் வெள்ளி தம்பதிகள் குறித்த இந்த ஆவண படத்தை இயக்கியவர் கார்த்தி கி கான்சால் வெஸ்.

   

மேலும் படத்தை தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் இந்த விருதை பெற்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கார் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

அந்த பிரிவில் போட்டியிட்ட மற்ற நான்கு படங்கள் ஹால் அவுட், தி மறாத்தா மிட் செல் எபெஃக்ட், ஸ்ரெஞ்சர் அட் த கேட் , ஹவ் டூ யூ மேசர் ய இயர் ஆகியவை ஆகும்.

இந்த பிரிவின் கீழ் பரிசு பெறும் முதல் இந்திய திரைப்படம் தி எலிபன்ட் விஸ்பர்ஸ். அது மட்டுமல்லாமல் போட்டியில் கலந்து கொள்ளும் மூன்றாவது திரைப்படமும் ஆகும்.

இந்த ஆவண குறும்படம் முழுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. இது அனாதை யானையான ரகுவின் கதை ஆகும்.

இந்த யானையை பொம்மா மற்றும் வெள்ளி என்ற இரண்டு தம்பதியினர் பராமரித்து வந்தனர். இந்த ஆவணப்படத்தில் யானை மற்றும் தம்பதிகள் இடையே உறவு மற்றும் பாசப்பிணைப்பு மற்றும் படமாக்கப்படவில்லை.

அங்கு சுற்று இருந்த இயற்கை சூழலும் படமாக்கப்பட்டு இருந்தது. இந்தப் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நெட் பிளிக்சில் வெளியிடப்பட்டது.

இந்த வருடம் ஆஸ்கருக்கு தி எலிபன்ட் விஸ்பர்ஸ் படத்துடன், உலக அளவில் வைரலான நாட்டு நாட்டுப் பாடலும் தேர்வானது.

இந்த பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற தலைப்பின் கீழ் வென்றுவிட்டது.

இந்தப் பாடலுக்கும் நேற்று ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது தி எலிபன்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Archana