Connect with us

HISTORY

விசிறி வீசுபவர்களை கருணையே இல்லாமல் கொலை செய்த பிரிட்டிஷார்! இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் நம்ம இந்தியாவுல நடந்துருக்கா?

குளுமையான இங்கிலாந்து நாட்டை விட்டுவிட்டு காலனி நாடான இந்தியாவில் செட்டில் ஆன பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்தியாவின் வெப்பம் ஒரு கொடுமையான விஷயமாக இருந்தது. இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் மிகவும் போராடினார்கள்.

பகலில் அலுவலக வேலை பார்க்கும்போது வியர்த்துக்கொட்டுகிறது, இரவில் தூங்கும்போதும் வியர்த்துக்கொட்டுகிறது. இதற்கு என்னதான் தீர்வு என்று யோசித்த பிரிட்டிஷார்களுக்கு கிடைத்த விடைதான் பங்கா.

   

ஒரு மன்னர் அமர்ந்திருக்கும்போது அவருக்கு காற்று வரவேண்டும் என்று இரு புறங்களிலும் மயிலிறகை கொண்டு விசிறிவிடுவதை நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதே போல் பருத்தி துணிகளை அந்தரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு நீளமான மூங்கில் கழியோடு கட்டிவிட்டு அந்த பருத்தி துணிகள் கீழ் நோக்கி தொங்குவது போல் பார்த்துக்கொள்வார்கள். அந்த மூங்கில் கழியில் பொருத்தப்பட்ட ஒரு நீளமான கயிற்றை கீழே இருக்கும் ஒருவர் ஒவ்வொருமு றையும் இழுத்து இழுத்து விட அந்த பருத்து துணி முன்னேயும் பின்னேயும் ஆடும். அந்த பருத்து துணிகள் முன்னேயும் பின்னேயும் அசைவதன் மூலம் அதில் இருந்து வெளிவரும் காற்று பிரிட்டிஷாருக்கு சுகானுபவத்தை கொடுத்தது.

பங்காக்களின் கயிற்றை இழுத்து இழுத்து காற்றை வரவழைப்பதற்காகவே பிரிட்டிஷார்கள் அதற்கென தொழிலாளர்களை நியமித்திருந்தார்கள். அந்த தொழிலாளர்களை பங்காவாலா என்று அழைத்தார்கள். 19 ஆம் நூற்றாண்டில் கல்கத்தாவில் பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களின் குடும்பத்தோடு தங்கியிருக்கும் வீடுகளில் எல்லாம் இந்த பங்காக்கள் தொங்கின.

அலுவலகம், குளியலறை, உடை மாற்றும் அறை, சாப்பிடும் அறை என ஒவ்வொரு அறையிலும் பங்காக்கள் தொங்கின. அந்த பங்காக்களை இழுக்க இந்தியாவின் பல பகுதிகள் இருந்து பங்காவாலாக்களை வரவழைத்தனர். அந்த பங்காவாலாக்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

பெரும்பாலும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்கள் அனைவரையும் நாய்களைப் போலதான் நடத்தினார்கள். ஆனால் பங்காவாலாக்களை பிரிட்டிஷார்கள் தெருநாய்கள் போல் நடத்தினார்கள். பங்காவை ஒழுங்காக இழுக்கவில்லை என்றாலோ அல்லது பங்கா இழுத்து சரியாக காற்று வரவில்லை என்றாளோ அந்த பங்காவாலைவை மிகவும் கடுமையாக தாக்கினார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். சில பிரிட்டிஷ் அதிகாரிகள் பங்காவாலாக்களை அடித்தே கொன்றிருக்கின்றனர்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 21 பங்காவாலா உயிரிழப்பு வழக்குகள் அன்றைய பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் பதிவாகியிருக்கின்றது. ஆனால் அனைத்து வழக்குகளிலும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கப்பட்டதில்லை.

பங்காவாலாக்கள் கைவலிக்க பங்காவை இழுத்துக்கொன்டிருக்கும்போது சில நிமிடங்கள் அசதியில் தூங்கிவிடுவது உண்டு. அவர்கள் தூங்கிவிட்டால் நமக்கு காற்று வராதே என்று எண்ணிய பிரிட்டிஷார் சிலர், பங்காவாலாக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சக்கரையை கொட்டிவிடுவார்கள். அந்த சக்கரையை தேடி வரும் எறும்புகள் பங்காவால்லாக்களை கடித்து அவர்களை தூங்கவிடாமல் செய்துவிடும் என்று அவ்வாறு செய்தார்களாம்.

சில பங்காவாலாக்கள் பகல், இரவு பாராமல் பங்காக்களை இழுப்பார்களாம். அவர்கள் தூங்கக்கூடாது என்பதற்காக அவர்களின் கக்கத்தில் வாத்து ஒன்றை பிடிக்கச் சொல்லிவிட்டு இன்னொரு கையால் பங்காவை ஆட்டச்சொல்வார்களாம். ஒரு வேளை பங்காவாலா தூங்கிவிட்டால் அந்த வாத்து நடந்து போய்விடும் அல்லவா. அப்படி அந்த வாத்தை தூக்கத்தால் தவறவிடும் பங்காவாலாக்களை மனசாட்சியே பார்க்காமல் அவர்களின் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பிவிடுவார்களாம் பிரிட்டிஷார்.

இது போல் பங்காவாலாக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். எனினும் 20 ஆம் நூற்றாண்டில் மின் விசிறிகள் அதிகளவு புழக்கத்திற்கு வந்ததால் பங்காவாலாக்களின் தேவை இல்லாமல் போனது. பங்காவாலாக்கள் அதன் பின் வேலையில்லாமல் இருந்தனர் என்றாலும் அவர்கள் கைவலி இன்றி நிம்மதியாக தூங்கினார்கள் என்று வரலாற்று ஆய்வாளர் முகில் சிவா இந்த கொடூர வரலாற்றை தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

 

Continue Reading

More in HISTORY

To Top