‘நீங்க கட்டப்பஞ்சாயத்து பண்ணாதீங்க!’…. விக்ரமனை பார்த்து கோபத்தில் கத்திய  அசிம்!… பரபரப்பாக வெளியான ப்ரோமோ இதோ!…

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சண்டைக்கு மட்டும் எப்பொழுதும் பஞ்சம் இருப்பதில்லை. இரண்டு வாரங்களாக அமைதியாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று கொடுக்கப்பட்ட ரேங்க் டாஸ்கினால் போர்க்களமாக மாறி உள்ளது.

   

இந்நிலையில் இன்றைய நாளில் இரண்டாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. முதல் ப்ரோமோவின் தொடர்ச்சியாக இரண்டாவது ப்ரோமோவிலும் அசீம் மற்றும் விக்ரமன் இடையே சண்டை இடம் பெற்றுள்ளது.

அந்தவகையில் ‘விளையாட்டு என்பது விளையாட்டு தான். அதற்காக ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ கூடாது’ என அசீமை பார்த்து கூறுகிறார் விக்ரமன்.

அதுமட்டுமல்லாது ‘பருப்புப் பஞ்சாயத்து என்று சொல்லாதீங்க. இது உங்களுக்குரிய இறுதி எச்சரிக்கை’ எனவும் கோபத்தில் கூறுகின்றார். அதற்கு அசீமும் ‘எனக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சினை முடிஞ்சுது. நீங்க எதற்கு இடையில வாறீங்க’ எனக் கேட்டு கத்துகின்றார். இவ்வாறு இன்றைய நாளில் இரண்டாவது பிரமோ வெளிவந்துள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….