அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது மாணவருடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 4-ம் தேதி மாணவரின் செல்போனை அவரது தாயார் சோதனை செய்தபோது, ஆசிரியரின் ஆபாசப் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இருவரும் காதல் உறவில் இருந்ததும், அக்டோபர் 31-ம் தேதி ஆசிரியரின் காரில் பாலியல் உறவில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மாணவரின் செல்போனை தடயவியல் ஆய்வு செய்த காவல்துறையினர், பாலியல் செயல்கள் குறித்து ஆசிரியர் அனுப்பிய பல்வேறு குறுஞ்செய்திகளைக் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, நவம்பர் 4-ம் தேதி தனது பணியை ராஜினாமா செய்த மியா, நவம்பர் 11-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,05,000 அமெரிக்க டாலர் பிணைத்தொகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், மாணவர்களுடன் தொடர்பு கொள்ளவும் இணைய வசதி கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
