ஐயோ பாவம்… தொழிற்சாலையில் நடந்த கோரம்… சூடான ரசாயன வாளியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை… 10 நாட்கள் போராடி பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

By Swetha on கார்த்திகை 15, 2026

Spread the love

பெங்களூரு ஸ்ரீராம்புரா பகுதியில் உள்ள எல்.என். புரம் பகுதியைச் சேர்ந்த 1 வயது 9 மாத ஆண் குழந்தை சுப்ரமணி. கடந்த நவம்பர் 2-ம் தேதி காலை, தனது 8 வயது சகோதரியுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் இருந்த ‘சிவம் காப்பர் மேக்கர்’ தொழிற்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளான்.

அங்கு பின்னோக்கி நடந்து சென்ற குழந்தை, எதிர்பாராத விதமாகத் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சூடான ரசாயனம் நிரம்பிய வாளியில் தடுமாறி விழுந்தது. வாளி கவிழ்ந்து சூடான ரசாயனம் உடலில் கொட்டியதில் பலத்த காயமடைந்த குழந்தையை, அங்கிருந்த சகோதரியும் தொழிற்சாலை ஊழியர்களும் உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

   

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் தொழிற்சாலையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், ஸ்ரீராம்புரா காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.