“என் அப்பாவையே இப்படி”…. நடுவீதியில் தாய்மாமனை வெறித்தனமாக கொன்ற கொத்தனார்… பாதை சண்டையில் அரங்கேறிய கோரச் சம்பவம்….!

By Nanthini on கார்த்திகை 9, 2026

Spread the love

திருவட்டார் தேரிவிளை, இலுப்பக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (52). சிற்றாள் வேலை செய்து வரும் இவருக்கும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அக்கா குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளாக பாதை சம்மந்தமான சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு ஜோதிக்கும் அவரது அக்கா மகனும் கொத்தனார் வேலை செய்பவருமான முருகேசனுக்கும் (37) இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முருகேசன், ஜோதியை தாக்கி நிலை குலைந்து கீழே விழச் செய்துவிட்டு, அருகில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி அவரது தலையில் போட்டுள்ளார். இதில் தலை சிதைந்து ஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உயிரிழந்த ஜோதியின் மகள் சந்தியா அளித்த புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகேசனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ஜோதி மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதும், அவர் குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக அக்கா தம்பி குடும்பங்களுக்கு இடையே நிலவி வந்த சொத்துச் சண்டை தற்போது கொலையில் முடிந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.