அடகொடுமையை..! எரிந்த நிலையில் சடலம்… சாம்பலான பெண்… நாடகமாடிய புகுந்த வீடு… கதறிய கணவன்… போலீஸ் விசாரணையில் வெடித்த பகீர் உண்மை…!!

By Gayathri on கார்த்திகை 9, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் பெண் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுந்தரபாண்டியபுரம் சாலையில் உள்ள வாழைத்தோட்டத்தில் கிடந்த பெண்ணின் உடலைக் கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் அடையாளம் தெரியாத பெண்ணாக இருந்த நிலையில், விசாரணையில் அவர் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த குட்டிமாரி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை கொலைக்குக் காரணமாக இருந்தது தெரியவந்தது. குட்டிமாரிக்கும் அவரது கொழுந்தன் ரவிக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் பழக்கம் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குட்டிமாரி உறவைத் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த ரவி, அவரை துண்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக அவரது உடலை அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

   

இதையடுத்து ரவி, தனது அண்ணன் முருகன் மற்றும் தாயார் சிவகாமி ஆகியோரின் உதவியுடன் குட்டிமாரியின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வாழைத்தோட்டத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தடயங்களின் அடிப்படையில் குற்றத்தில் தொடர்புடைய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.