விழுப்புரத்தில் நிகழ்ந்த சோகமான விபத்தில் சிலிண்டர் வெடித்து சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் உள்ளே அதிகளவில் பட்டாசுகள் வாங்கிச் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே இந்த அசம்பாவிதத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் தனது செல்போனுக்குச் சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக மின்பொறி உருவாகி, அங்கிருந்த பட்டாசுகளின் மீது விழுந்து தீப்பற்றிக் கொண்டது.
பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட கடுமையான தீ, நொடிப்பொழுதில் வீட்டின் ஃப்ரிட்ஜ் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் பரவியது. இதன் காரணமாகச் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், வீட்டின் முன்பகுதி மொத்தமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தற்போது திகைப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
