2015 மே 2 அன்று சிங்கிங் ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூ சுன்ஹே என்ற நபர் தனது வயதான தாய் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது மதுபோதையில் இருந்த அவர், தனது வண்டியால் பாதுகாப்பு சோதனை வாயிலை மறித்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அங்கு பணியில் இருந்த காவலர் லி லெபின் இதை தட்டிக்கேட்டபோது, அந்த நபர் காவலரை நோக்கி “உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டி வன்முறையில் ஈடுபடத் தொடங்கினார்.
காவலர் லி லெபின் நிலைமையைக் கட்டுப்படுத்த லாட்டியை எடுத்து வந்தபோது, அந்த வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியது. சூ சுன்ஹே தனது வயதான தாயைக் கேடயமாகப் பயன்படுத்தியதுடன், தனது 6 வயது மகளைக் காவலர் மீது தூக்கி வீசினார். மேலும் காவலரின் தலையில் பலமாகத் தாக்கி, அவரிடமிருந்த லாட்டியைப் பறித்துத் தொடர்ந்து தாக்கினார். இதனால் தன் உயிரைக் காக்கவும் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், காவலர் லி லெபின் தனது துப்பாக்கியை எடுத்து எச்சரித்தும் அவர் கட்டுப்படாததால், இறுதியில் அவரை நோக்கிச் சுட்டார். இதில் சூ சுன்ஹே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
https://twitter.com/blackym25/status/2119041031584854047/video/1
அவர் அரசாங்கத்திற்கு எதிராக மனு கொடுக்கச் சென்றதால் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இணையத்தில் பரவிய வதந்திகளைப் போலீஸ் விசாரணை முற்றிலுமாக மறுத்தது. தடயவியல் சோதனையில் அவர் கடுமையான மதுபோதையில் இருந்தது உறுதியானது. ரயில் நிலையக் காத்திருப்பு அறை போன்ற மூடிய மற்றும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் வான்நோக்கிச் சுட்டுக் கலைப்பது மற்ற பயணிகளுக்கு ஆபத்தாக முடியும் என்பதால், காவலர் நேரடியாகச் சுட வேண்டியிருந்தது என்று விளக்கமளிக்கப்பட்டது. இறுதியாக, காவலர் லி லெபின் தனது கடமையைச் சட்டப்படிதான் செய்தார் என்று விசாரணை குழுவினர் மற்றும் நிபுணர்கள் உறுதி செய்தனர். பாதிக்கப்பட்ட அவரது தாயும் குழந்தைகளும் பின்னர் அரசாங்க ஆதரவுடன் உறவினர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.
