கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர் நவம்பர் 5 அன்று சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் தம்பதியரின் இரண்டு வயது பெண் குழந்தை பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.
https://twitter.com/IndiaToday/status/2118289018463064295/video/1
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார், தடயவியல் துறை மற்றும் மோப்ப நாய் படையினருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
