ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 5, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர் வர்க்கல் மண்டல மையத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி, அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்திற்காக, ஆசிரியர் தன்னைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராம் சரண், தனது தந்தையைத் தொலைபேசியில் அழைத்துத் தொடர்புகொண்டு, ஆசிரியர் தன்னை அடித்ததாகவும், அதனால் இனி விடுதியில் தங்கிப் படிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

   

இந்த நிலையில், விடுதியில் மற்ற மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, ராம் சரண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.