நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளைவுட் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரஷர் கன் மூலம் பாய்ந்த ஆணி, அவரது நெஞ்சைத் துளைத்து இதயப் பகுதி வரை சென்றதால் அவர் பலத்த காயமடைந்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்த அவரைக் கண்டு, சக ஊழியர்களும் அங்கிருந்தவர்களும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
https://twitter.com/nextminutenews7/status/2118277527735320849/video/1
முதற்கட்ட விசாரணையில், மரவேலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பிரஷர் கன் தவறுதலாக இயங்கியதால் நடந்த விபத்து எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்தச் சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
